சகோதரியின் காணி மோசடி; சகோதரன் கைது

யாழ்ப்பாணம், கொக்குவில் கிழக்கு, பகுதியில் உள்ள காணியொன்றை மோசடி செய்து விற்றதாகக் கூறப்படும் நபர் ஒருவரை குற்றப்புலனாய்வு பொலிஸார் கைது செய்துள்ளனர்.பிரான்ஸில் உள்ள சகோதரியின் காணியை மோசடி செய்தார் என்று கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கிணங்கவே குறித்த சந்தேகநபர் புதன் இரவு கைது செய்யப்பட்டுள்ளார் என யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவரிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.