க.பொ.த சா/த, உ/த சித்தியடையாவிட்டாலும் பட்டப்படிப்பை மேற்கொள்ள வாய்ப்பு: கல்வி அமைச்சர்

bandula_gunawardena300pxகல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் சித்தியடையாத மாணவர்கள் 2013ஆம் ஆண்டில் பட்டப் படிப்பொன்றை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

2013இல் தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் தேசிய நிகழ்வு திருகோணமலை வித்தியாலோக வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், ‘தகவல் தொழில்நுட்பப் பட்டப்படிப்புக்காக மேற்படி பரீட்சைகளில் சித்தியடையாத மாணவர்கள் உள்வாங்கப்படுவர்’ என்றும் கூறினார்.