ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் செம்டெம்பர் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும். விடைத்தாள் திருத்தும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை (10) முதல் ஆரம்பிக்கப்படும் என்று பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தரப் பரீட்சை 2025.11.10 ஆம் திகதி முதல் 2025.12.05 ஆம் திகதி வரையும், 2025 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை 2026.02.17 ஆம் திகதி முதல் 2026.02.26 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை திட்டமிட்ட வகையில் சிறந்த முறையில் நிறைவடைந்துள்ளது. விடைத்தாள் திருத்தும் பணிகளை இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கவுள்ளோம்.
இதற்கமைய பரீட்சை பெறுபேறுகள் 2025.09.20 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும்.
2025 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் காலவகாசம் நாளையுடன் (12) நிறைவடைகிறது.ஆகவே தாமதமில்லாமல் விண்ணப்பிக்குமாறு விண்ணப்பதாரிகளிடம் கேட்டுக்கொள்கிறோம்.
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுதராதர உயர்தரப் பரீட்சை 2025.11.10 ஆம் திகதி முதல் 2025.12.05 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல் 2025 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை 2026.02.17 ஆம் திகதி முதல் 2026.02.26 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.