கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இரத்ததானம்

உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் ஆசிரிய மாணவர்கள் இரத்ததான முகாம் ஒன்றினை இன்று ஏற்பாடு செய்துள்ளனர்.

கடந்த ஒக்டோபர் 6 ஆம் திகதி உலக ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது.அதனை முன்னிட்டு கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஆசிரிய மாணவர்கள் இன்று காலை முதல் இரத்ததானம் செய்து செய்து வருகின்றனர்.

100ற்கு மேற்பட்ட ஆசிரிய மாணவர்கள் இரத்ததானம் செய்யவுள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கிளை இரத்த வங்கியான தெல்லிப்பழை கிளையினர் பெற்று வருகின்றனர்.

அத்துடன் ஆசியர் தினமும் இன்று கலாசாலையின் பிரதான மண்டபத்தில் கொண்டாடப்படவுள்ளது. ஆசிரியர்களே அனைவருக்கும் முன் உதாரணமானவர்கள் என்றும் இன்னொருவரது உயிரைக் காப்பாற்றுவதற்கு எமக்கு வழங்கப்பட்டுள்ள சிறந்த சந்தர்ப்பம் எனவும் இரத்த தானத்தில் கலந்து கொண்ட ஆசிரிய மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.