கோபுர திருத்தப் பணியில் ஈடுபட்ட மூவர் விழுந்து படுகாயம்

accidentமாதகல், நுணசை முருகன் ஆலய கோபுர திருத்தப் பணியில் ஈடுபட்டிருந்த மூவர் விழுந்து படுகாயம் அடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மதியம் நடைபெற்ற இவ்விபத்து சம்பவத்தில் வடலியடைப்பு பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த பொன்னையா சற்குணம் (வயது 54) என்பவர் படுகாயமடைந்த நிலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவிலும், பசுபதி சத்தியகுமார் (43) என்பவர் அவசர சிகிச்சைப் பிரிவிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, சுமார் 30 அடி உயரமுடைய முருகன் ஆலய கோபுர திருத்தப் பணியினை மேற்கொண்டிருந்தவேளை, சாரம் போடப்பட்டிருந்த மரம் முறிந்ததில் ஒரே வரிசையில் நின்ற மூன்று பேர் விழுந்ததில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor