கோண்டாவில் விபத்தில் இளைஞன் பலி; பிரதேசத்தில் பதற்றம்

accidentகோண்டாவில், பலாலி வீதி கிழக்கு சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

இதனையடுத்து அங்கு பெரும் பதற்றம் நிலவுவியதாக அறியமுடிகின்றது.

தென்னிலங்கையிலிருந்து சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ்வண்டியொன்றே பஸ்க்கு முன்பாக சென்றுக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் கோண்டாவில் கிழக்கு காளிகோவிலடியைசேர்ந்த 24 வயதான ரவிகுமார் பிரட்மன் என்ற இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தையடுத்து பஸ்ஸின் சாரதி தப்பியோடிவிட்டதாகவும் அந்த பஸ்ஸை சுற்றி பிரதேசவாசிகள் குழுமியிருந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளமையினால் அங்கு பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பதற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரும் இராணுவத்தினரும் அப்பகுதியில் குவிக்கப்பட்டு இந்தனர்.