கோண்டாவில் சடலம் மீட்கப்பட்டது தொடர்பில் சந்தேகத்தில் 4 பேர் கைது

வெட்டுக் காயங்களுடன் கோண்டாவில் பகுதியில் இருந்து சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களில் ஒருவர் பதுளையைச் சேர்ந்தவர் என்றும் ஏனைய மூவரும் புண்ணாலைக்கட்டுவையை சேர்ந்தவர்கள் என்றும் கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் தனியார் என்ஜினியரிங் நிறுவனமொன்றில் கடமையாற்றும் பதுளைச் சேர்ந்த ஆர்.டபிள்யூ.டி.நிஷாந்த சம்பத் ராஜபக்ஷ என்பவரே 5 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.