யாழ். மிருசுவிலில் 2000ஆம் ஆண்டில் 8 தமிழ் மக்களைப் படுகொலைசெய்த வழக்கில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நேற்றுமுன்தினம் மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ சிப்பாய் சுனில் ரத்னாயக்கவுக்கு ஆதரவாக ருவிற்றரில் தொடங்கப்பட்ட பக்கத்திற்கு முதல் நாளிலேயே 10 ஆயிரம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
‘போர் வெற்றி வீரர் சுனில் ரத்னாயக்கவை பாதுகாப்போம்’ என்ற பொருள்படும் ஆங்கில வார்த்தைகளால் தொடங்கப்பட்ட இந்தப் பேஸ்புக் பக்கத்திற்கே பல்லாயிரக்கணக்கான சிங்களவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
படைவீரர்களைப் பாதுகாப்போம் என அரசு மீண்டும் மீண்டும் கூறிவரும் நிலையில், சிங்கள மக்கள் மத்தியில் படைவீரர்கள் தொடர்பில் நிலவும் எண்ணத்தைப் பிரதிபலிப்பதாகவும் இந்த ஆதரவு அமைந்துள்ளதாக ருவிற்றர் பக்கத்தில் கருத்து வெளியிட்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
படைவீரர்கள் தமிழர்களுக்கு எதிராக எத்தகைய குற்றத்தை இழைத்தாலும் அவர்கள் தண்டிக்கப்படக்கூடாது என்பது கடும்போக்கு சிங்கள அமைப்புகளது நிலைப்பாடு மட்டுமன்றி, அநேகமான சிங்கள மக்களின் நிலைப்பாடாகவும் இருக்கின்றதோ என எண்ணும் வகையில் இந்தப் ருவிற்றர் பக்கம் அமைந்துள்ளது.
இதேவேளை முகப்புத்தகத்திலும் இதுவரையில் 14 000 பேர் தொடர்வது குறிப்பிடத்தக்கது.