கொரோனா தடுப்பூசியின் மனித பரிசோதனை தொடங்கியது!

கொரோனா (கொவிட்-19) வைரஸில் இருந்து நோயாளிகளை பாதுகாக்க தடுப்பூசி ஒன்றின் முதல்கட்ட மனித பரிசோதனை அமெரிக்காவில் தொடங்கப்பட்டுள்ளது என்று அஸ்சோஸிகட் ப்ரஸ் நியூஸ் அகன்சியை (APNA) மேற்கோள்காட்டி பிபிசி ஆங்கில சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி வஷிங்கடனில் உள்ள கைசர் ஆராய்ச்சி நிலையத்தில் நான்கு நோயாளிகளிடம் இந்த ஊசியின் மனித பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதில் முதலாவதாக 46 வயதுடைய ஜெனிபர் ஹல்லர் என்ற தாய் ஒருவருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. “இது தனக்கு கிடைத்த அருமையான வாய்ப்பு” என்று ஜெனிபர் குறித்த ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.