கொடிகாமத்தில் இராணுவத்தினர் துப்பாக்கி சூடு – கடத்தல்காரர் தப்பியோட்டம்

கொடிகாமம் பகுதியில் சட்டவிரோத மணல் ஏற்றி சென்ற உழவு இயந்திரத்தின் மீது இராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

கொடிகாமம் பாலாவி காட்டுப்பகுதியில் இராணுவத்தினர் நேற்று மாலை 6.30 மணியளவில் சுற்று காவல் பணியில் (ரோந்து) ஈடுபட்டிருந்த போது சட்டவிரோத மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை மறித்தகாகவும் ,அதன் போது, இராணுவத்தினரின் கட்டளையை மீறி அவர்கள் உழவு இயந்திரத்தில் தப்பி செல்ல முற்பட்ட போது வாகனத்தின் ரயர்களை இலக்கு வைத்து இராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவத்தினரின் துப்பாக்கி சூட்டினால் ரயர் காற்று போக உழவு இயந்திரத்தில் பயணித்த மூவர் வாகனத்தை கைவிட்டு காட்டுக்குள் பாய்ந்து தப்பி சென்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உழவு இயந்திரத்தை மீட்டதுடன் , தப்பி சென்ற மூவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor