கைதடி பாலத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். லொறியும் பஸ்ஸொன்றும் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்றுக்காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த ஐவரும் யாழ்.போதனா வைத்தியச்சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.