கே. வி ஆனந்துக்கு கிரீன் சிக்னல் கொடுத்த அஜித்

தல அஜித் தற்போது கௌதம் மேனன் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் கௌதம் மேனன் படத்துக்கு பிறகு அஜித் வீரம் சிவாவுடன் இணைகிறார், ஒரு படம் நடக்கும் தருவாயில் அடுத்த படத்தின் அறிவிப்பு அஜித் படத்துக்கு வருவது வழக்கம், ஆனால் இந்த தடவை சிவா படத்துக்கு அடுத்து கே .வி ஆனந்தின் கதையே உடனே ஓகே செய்து உள்ளார்என நம்பக தகவல் கிடைத்துள்ளது.

ajith_kv_anand001

கோ, மாற்றான் தற்போது அனேகன் படத்தை எடுத்து வரும் கே வி.ஆனந்த் கிட்டத்தட்ட அஜித்தை கடந்த ஓர் ஆண்டுக்கு மேல் சந்தித்து வருகிறார்.

கடந்த இரண்டு நாட்கள் முன்பு கே.வி. ஆனந்த் இடைப்பட்ட நேரத்தில் அஜித்தை சந்தித்து முழு கதையை சொல்லியுள்ளார். அவருக்கும் கதை பிடித்து போக ஓகே சொல்லியுள்ளார் இப்படம் பக்கா க்ரைம் த்ரில்லர் கலந்த ஆக்ஷன் படம் உருவாக உள்ளதாம்.