கூட்டுறவில் ஊழல், அதிரடி நடவடிக்கை வேண்டும் என்கிறார் சிவாஜி

கூட்டுறவுதுறை என்றால் அது ஒரு மோசமான துறை என்று கூறக்கூடிய அளவிற்கு வடக்கு மாகாணத்தில் கூட்டுறவு துறை உள்ளது என உறுப்பினர் சிவாஜிலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார்.

sivajilingam_tna_mp

கூட்டுறவு சங்கங்களின் உபவிதிகள் அவற்றின் தலைவர் மற்றம் இயக்குநர் சபை உறுப்பினர்கள் தொடர்ச்சியாக இரண்டு தடவைக்க மேலாக பதவி வகிக்க முடியாது என வரையறை செய்துள்ள போதும் ப.நோ.கூ சங்கங்களின் உபவிதிகளில் அவ்வாறான மட்டுப்பாடு இன்மையால் பலர் தொடர்ந்து பதிவி வகித்து வருகின்றனர்.

எனவே முறைகேடுகளுகள் ஏற்பட்டு வருகின்றது.தொடர்ச்சியாக இரண்டு தடவைகளுக்கு மேல் பதவி வகிப்பது மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்ற பிரேரணையினை வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் சபையில் கொண்டுவந்திருந்தார்.

குறித்த பிரேரணையின் விவாதத்தின் போதே உறுப்பினர் சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கூட்டுறவுத்துறை குறித்து கூறுவதாக இருந்தால் கடந்த ஒரு வருடத்தில் பல்வேறு ஊழல் ஏற்பட்டுள்ளது. எத்தனையோ சபைகளுக்கு நிலைக்குழு தேர்தல் நடைபெறவில்லை. கூட்டுறவுத்துறை தற்போது சீரழிந்து போய் இருக்கின்றது. கூட்டுறவு துறை என்றால் ஒரு சீரழிந்த துறை என்று கூறுமளவிற்குத்தான் தற்போது நிலை உள்ளது.

இது சுகம் வரும் ஆள் தப்பாது என்ற கதை தான்.அடுத்து கூட்டுறவு துறைக்கு என நியதிச் சட்டம் கொண்டு வரப்போகின்றோம் என்றால் எப்போது கொண்டுவரப்போகின்றீர்கள்? 5 வருட ஆட்சி முடிந்த பின்னரா கொண்டு வரப்போகின்றீர்கள் என நான் கேட்க விரும்புகின்றேன்.

எனவே முடிந்தளவில் அதிரடியாக தீர்மானங்களை எடுத்து ஊழலைத் தண்டிக்க வேண்டும்.ஒவ்வொரு நாளும் எமக்கு ஊழல் பட்டியல் வந்து கொண்டு இருக்கின்றது. அத்துடன் உள்ளூராட்சி அமைப்புகளுக்கு இடையில் இருக்கக் கூடிய சில ஊழல்கள் வெளி வந்திருக்கின்றது. இவ்வாறானவற்றைப் பேச எமக்கு நேரம் ஒதுக்கித் தரவேண்டும்.

கூட்டுறவில் இருப்பவர்கள் தொடர்ந்தும் ஆட்சியைப்பிடித்துக் கொண்டு தொடர்ந்தும் எலிகளாக இருந்து உறிஞ்சிக் கொண்டு வருகின்றனர். எனவே இவற்றைக் களைந்து சீரமைக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.