குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு வேட்பு மனு வழங்க வேண்டாம்: பெபரல்

paffrel-electionபாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு வேட்பு மனுக்களை வழங்க வேண்டாம் என பெப்ரல் அமைப்பு அரசியல் கட்சிகளிடம் கோரியுள்ளது.

வன்முறைகள், குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் அளிக்கக் கூடாது.

பிரதேச அரசியல்வாதிகளுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன.

நல்லொழுக்கம் உடையவர்களுக்கு மட்டும் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட வேண்டும் என பெபரல் அமைப்பு கோரியுள்ளது.