குப்பிளானில் நள்ளிரவில் கொள்ளை

குப்பிளான் பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் சுமார் ஏழு லட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதுடன் நீக் இறைக்கும் இயந்திரம், கையடக்கத் தொலைபேசிகள் என்பனவும் களவாடப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று நள்ளிரவு குப்பிளான் சந்திக்கு அண்மையாகவுள்ள வீட்டில் நுழைந்த திருடர்கள் வீட்டில் இருந்த வயோதிப தம்பதியினரை மயக்கிய நிலையில் இந்த கொள்ளையை மேற்கொண்டுள்ளார்கள் என்று பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.

ஓன்பது பவுண் நிறையுடைய தாலிக்கொடி, 3 பவுண் தங்கச் சங்கிலி, மற்றும் புதிய கையடக்கத் தொலைபேசிகள் மூன்று, நீர் இறைக்கும் இயந்திரம் என்பனவே கொள்ளையிடப்பட்டுள்ளன.

இது தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் இன்று பகல் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரனைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor