குடாநாட்டில் விவசாயம் வறட்சியால் பின்னடைவு – அரச அதிபர்

யாழ்.மாவட்டத்தில் கடந்த காலத்தில் ஏற்பட்ட வறட்சியால் விவசாயத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக யாழ்.அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

dak-suntharam-arumainayagam-GA

நேற்று யாழ்.மாவட்டத்தில் உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்களுக்கான சந்தை வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கை தொடர்பில் அரச அதிபரிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் நெற்பயிர்ச்செய்கை வீழ்ச்சியடைந்துள்ளது.வெங்காயம் மற்றும்
ஏனைய பயிர்ச் செய்கைகளும் பெரும் பின்னடைவை எதிர்கொண்டுள்ளன.இதனைச் சமாளிக்க வேண்டிய நிலையில் இருப்பதுடன் முன் ஆயத்த வேலைகளைச் செய்வதற்குத் தீர்மானித்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.