‘காவியத் தலைவன்’ படத்தின் சுவாரஸியமான டிரெய்லர்

‘அரவான்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் வசந்தபாலன் இயக்கி வரும் படம் “காவியத் தலைவன்”. இப்படத்தில் சித்தார்த் நாயகனாகவும் வேதிகா நாயகியாகவும் நடிக்க, இவர்களுடன் பிருத்விராஜ், நாசர், அனைகா ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு நா.முத்துக்குமார் பாடல்கள் எழுதியுள்ளார்.

kaviyathalaivan

சுதந்திரப் போராட்டக் காலத்திற்கு முந்தைய கதையைக் கொண்ட காவியத் தலைவன் படத்தில், கே.பி.சுந்தராம்பாளின் கதையும் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காவியத் தலைவன் படத்தின் டிரெய்லர், இந்தத் தீபாவளியை முன்னிட்டு வெளியானது. காலத்தைப் பிரதிபலிக்கும் வண்ணங்கள், அதற்கு ஏற்ற உடைகள், ஒப்பனை, இசை, படத் தொகுப்பு, நடிப்பு… என நேர்த்தியான, சுவாரஸியமான இந்த டிரெய்லரை இங்கே பார்த்து மகிழுங்கள்: