காணி தொடர்பான தீர்மானம் விரைவில் ஜனாதிபதியின் கவனத்திற்கு

வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட காணி சம்பந்தமான அரசியல் யாப்பின் ஏற்பாடுகளை அமுல் செய்யுமாறு கோரும் தீர்மானம் தொடர்பாக விரைவில் ஜனாதிபதியின் பரிசீலனைக்கு சமர்பிக்கப்படும் என ஜானதிபதி செயலளார் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

காணிகள் சம்பந்தமான அரசியல் யாப்பின் ஏற்பாடுகளை அமுல் செய்யுமாறு கோரி வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வட மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் கடிதம் ஒன்றை எழுதினார். இக்கடிதம் தமது அலுவலகத்தில் கிடைகப்பெற்றுள்ளதாகவும்,

அதனை கூடுமான விரைவில் ஜனாதிபதியின் பரிசீலனைக்கு சமர்பிக்கவுள்ளதாகவும் ஜானதிபதியின் செயலளார் லலித் வீரதுங்க வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.