காணிப் பதிவுக்கான கட்டணத்தில் மாற்றம்

காணி உறுதிப் பத்திரங்கள் மற்றும் ஆவணங்களை பதிவு செய்வதற்கான புதிய கட்டணத் திருத்தம் ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.காணி உறுதிப்பத்திர பிரதிகளை பெற்றுக்கொள்ளவதற்கான கட்டணங்களிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் ஈ.எம்.குணசேகர தெரிவித்துள்ளார்.

காணி உறுதிப் பத்திரங்கள் மற்றும் ஆவணங்களை பதிவு செய்வதற்காக 100 ரூபா அறவிடப்படுவதாகவும் தொழில் நிறுவனமொன்றை பதிவு செய்வதற்காக 2,500 ரூபா அறவிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.இதேவேளை, காணி உறுதிப் பத்திரத்தின் பிரதிகளை பெற்றுக்கொள்வதற்கான கட்டணம் 500 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webadmin