காணாமல்போன வேலனையை சேர்ந்த இளைஞன் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் சரவனை மேற்கு வேலனையை சேர்ந்த பானுசன் என்ற இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்றைய தினம் வீட்டிலிருந்து காணாமல் போயிருந்தநிலையில் உறவினர்கள் இவரை தேடியுள்ளனர். இந்தநிலையில் வீட்டிற்கு அண்மையிலுள்ள பாழடைந்த வீடொன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட சடலத்தின் கால் பகுதியில் இரத்தம் வடிந்துகொண்டிருந்த நிலையில் இது கொலையாக இருக்கலாம் என உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.

இதேவேளை சடலமாக மீட்கப்பட்வர் காலில் உள்ள காயமானது எறும்பு போன்ற பூச்சிகள் எதாவது கடித்ததால் ஏற்பட்டிருக்கலாம் எனவும் இதன்போது காலில் தேங்கியிருந்த இரத்தமானது காயத்தினூடாக வடிந்திருக்கலாம் எனவும் யாழ் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்ற அதேவேளை இதில் தற்கொலைக்கு எதுவான காரணிகள் எதுவும் இல்லை எனவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தசம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை ஊர்காவல்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts