காசோலை மோசடி

கோழி இறைச்சியை வாங்கிவிட்டு காசோலையைக் கொடுத்து ஏமாற்றியுள்ளார் என்று வியாபாரி ஒருவருக்கு எதிராகத் தென்னிலங்கை வியாபாரி ஒருவர் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் 2 லட்சத்து 12 ஆயிரம் ரூபா பெறுமதியான கோழி இறைச்சியை பிந்திய திகதியிட்ட காசோலையைக் கொடுத்துக் கொள்வனவு செய்துள்ளார். காசோலை கொடுக்கப்பட்டு பல மாதங்கள் கடந்த நிலையிலும் அதற்கான பணம் வங்கியில் இடப்படவில்லை.

இந்த நிலையில் குறித்த தென்னிலங்கை வியாபாரி கடந்த 10 மாதங்களாகப் பணத்தைப் பெறுவதற்கு முயன்று வந்துள்ளார். அது பயனளிக்காத நிலையில் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர், ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போது இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor