காக்கி சட்டை மாட்டியது ஏன்? சிவகார்த்திகேயன் விளக்கம்

இதுவரை முழுநீள காமெடி படங்களில் மட்டுமே நடித்து வந்த சிவகார்த்திகேயன். திடீரென காக்கி சட்டை படத்தில் ஆக்ஷன் அவதாரம் எடுத்திருக்கிறார்.

siva-karaththekeyan

அதுவும் போலீஸ் ஆக்ஷன். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:இயக்குனர் துரை செந்தில்குமார் காக்கிசட்டை கதையை சொல்ல வந்தபோது பத்துபேரை பறந்து அடிக்கிற கதைன்னுதான் நினைச்சேன்.

ரஜினி மாதிரி, கமல் மாதிரி, சூர்யா மாதிரி, விக்ரம் மாதிரின்னு கற்பனை பண்ணினேன். ஆனால் இந்த கதை அப்படி இல்லை. போலீஸ் வேலைய கனவா நினைச்சு சேர்ந்து அதை ரசிச்சு பண்றவனோட கதை.

ஒரு நேரத்தில் பத்து ஆளை பறக்க விடுற போலீசாக இல்லாம ரியல் போலீஸ். எங்க அப்பா மாதிரி போலீசாகணுங்ற என்னோட சின்ன வயசு கனவு நிறைவேறல அது சினிமால நடந்திருக்கு.

மேலதிகாரி பிரபு சாருடன் குறும்பு, ஸ்ரீதிவ்யாவுடன் காதல் அரும்புன்னு நிறை ஜாலியும், காமெடியும் 60 சதவிகிதம் இருக்கு.
படத்துக்காக கொஞ்சம் வெயிட் போட்டு பிட்டாகி போலீஸ் டிரஸ் போட்டு பார்த்து எனக்கே திருப்தியான பிறகுதான் ஷூட்டிங்கே போனேன்.

இது போலீஸ் படமாக இருந்தாலும் இது என்னோட படமாக இருக்கும், தியேட்டருக்கு வர்றவங்களை டைட்டில்லேருந்து எண்ட் கார்ட் வரைக்கும் ரசிக்க வைக்கிற படமா இருக்கும் என்கிறார் சீனா கானா.