கள்வருக்கு வைத்த பொறியில் சிக்கி மாணவன் மரணம்

வீட்டுத்தோட்டத்தின் ஊடாக வீட்டுக்குள் நுழையும் கள்வர்களைபு; பிடிப்பதற்காக, சட்டவிரோதமான முறையில் போடப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்குண்டு, 15 வயதான மாணவனொருவன் பலியான சம்பவம், வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

வவுனியா, செலினிகம 2ஆவது ஒழுங்கையிலேயே இந்தச் சம்பவம் நேற்றுத் திங்கட்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில், 9ஆம் தரத்தில் பயிலும் அமில சந்தருவன் குமார (வயது 15) பலியாகியுள்ளான்.

இவர், காலையில் பாடசாலைக்குச் செல்வதற்கு முன்னர், வீட்டுத்தோட்டத்தில் கட்டப்பட்டிருக்கும் மாடுகளை, மேய்ச்சல் தரைக்குக் கொண்டு செல்வதை வழக்கமாக கொண்டிருப்பவர்.

அவ்வாறு நேற்றும் கொண்டு சென்றுகொண்டிருந்தபோது, குறித்த வீடு மூடியிருப்பதை அவதானித்துள்ளான். அவ்வீட்டுத் தோட்டத்துக்குள் புகுந்து, வீட்டின் யன்னலைத் திறந்து பார்ப்பதற்கு முயன்றபோதே, யன்னலில் கொழுவப்பட்டிருந்த மின்வடத்தில் சிக்கி, மாணவன் பலியாகியுள்ளான்.

குறித்த வீட்டின் உரிமையாக அநுராதபுரம் ராஜாங்கனை பகுதிக்கு நீண்ட விடுமுறையில் செல்லும் போதெல்லாம், கள்வர்கள் வீட்டுக்குள் நுழைந்து கைவரிசையைக் காட்டிவிடுவதால், கள்வர்களைப் பிடிப்பதற்காகவே இவ்வாறு மின்வடத்தை வைத்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று தெரிவித்த பொலிஸார்,
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருதாகவும் தெரிவித்தனர்.

Related Posts