களனி பல்கலை. ஆராய்ச்சியாளர்களால் கோரோனா வைரஸிலிருந்து பாதுகாக்கும் தலைக்கவசம் உருவாக்கம்

கோவிட் – 19 வைரஸிலிருந்து பாதுகாக்கக்கூடிய தலைக்கவசம் ஒன்றை களனி பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி குழு உருவாக்கியுள்ளது.

இந்த தலைக்கவசம் முகக்கவசம் மற்றும் கையுறைக்கு பதிலாக பயன்படுத்தப்படலாம் என்று ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது.

இந்த தலைக்கவசம் ஒரு அடையாள குறியீட்டையும் கொண்டுள்ளது. எனவே தேசிய பாதுகாப்புக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று ஆராய்சிக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

ஆராய்ச்சி குழுவின் குழு உறுப்பினர்கள் மருத்துவர் ரங்கிகா பண்டார மற்றும் அகிலா லன்சகர ஆகியோர் தெரிவித்ததாவது;

தலைக்கவசம் முகத்தின் பகுதியை முழுவதுமாக உள்ளடக்கியது, காற்றோட்டம் முதலில் வடிகட்டப்பட்டு பின்னர் முகக்கவசம் வழியாக நுழையும்.

தலைக்கவசம் ஒரு வெளியேற்ற விசிறியைக் கொண்டுள்ளது. அது வியர்வையைத் தடுக்கும். அத்துடன், மூக்குக் கண்ணாடி அணிந்த நபர்களுக்கு பனிமூட்டத்தைத் தவிர்க்கிறது.

இந்தத் தலைக்கவசம ஒரு ஐஆர் சென்சருடன் வருகிறது. இது அணிந்தவரிடமிருந்து ஒரு மீற்றருக்குள் அதிக உடல் வெப்பநிலையைக் கொண்ட ஒரு நபரைக் கண்டுபிடிக்கும் – என்றனர்.

 

Recommended For You

About the Author: Editor