‘கத்தி’ படத்தில் விஜய் கூறிய செல்போன் நம்பரால் பள்ளி ஆசிரியர் தவிப்பு!

கத்தி படத்தில் விஜய் அடிக்கடி கூறிய செல்போன் நம்பர் அருமனையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவருடையது.

vijay-samantha

தீபாவளிக்கு வெளியான கத்தி படத்தில் நாயகி சமந்தா தன் காதலன் விஜய்யிடம் ஒரு செல்போன் நம்பரை கொடுப்பார். விஜய் அந்த நம்பரை பலமுறை கூறுவார். ஆனால் அவர் அந்த நம்பரை டயல் செய்தால் மறுமுனையில் பேசுபவர் நாங்கள் மாநகராட்சியின் நாய் பிடிக்கும் பிரிவு என்று என்பார்.

இது படத்தில் காமெடியாக இருந்தது. ஆனால் நிஜத்தில் இதனால் ஒரு ஆசிரியர் அவதிப்பட்டு வருகிறார்.

விஜய் படத்தில் தெரிவித்த செல்போன் நம்பர் குமரி மாவட்டம் அருமனையைச் சேர்ந்த பள்ளி ஆசிரியருடையது. விஜய் ரசிகர்கள் பலரும் அந்த நம்பருக்கு போன் செய்து பேசுகிறார்கள்.

ரசிகர்கள் ஆசிரியரின் நம்பருக்கு போன் செய்து மறுமுனையில் இருப்பது யார் என்று கூட தெரியாமல் இளைய தளபதி என்று நினைத்துக் கொண்டு பேசுகிறார்கள். இதனால் ஆசிரியர் கவலை அடைந்துள்ளார்.

ஆரியருக்கு போன் செய்பவர்கள் முருகதாஸ், சமந்தாவிடம் பேச வேண்டும் என்று கேட்கிறார்களாம். அவரது போன் இடைவிடாது ஒலித்துக் கொண்டே இருப்பதால் அவர் அதை பள்ளிக்கு எடுத்துச் செல்வதை நிறுத்திவிட்டார். பள்ளிக்கு சென்றுவிட்டு வந்து பார்த்தால் 400க்கும் மேற்பட்ட மிஸ்டு கால்கள் உள்ளன.

வெளிநாட்டு ரசிகர்களும் போன் போட்டு தொல்லை செய்வதால் இது குறித்து அந்த ஆசிரியர் கத்தி படத்தின் இயக்குனர் முருகதாஸை சந்திக்க விரும்புகிறார்.