கண்ணி வெடி அகற்றல் இறுதி நிலையில்

BOMS_minsஇலங்கையின் வடக்கு பகுதியில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் நிறையும் நிலையை எய்தி இருப்பதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

அதிக கண்ணி வெடி அபாயம் இருப்பதாக அடையாளம் காணப்பட்ட 2064 சதுர கிலோமீற்றர் பரப்பில், 1968 சதுர கிலோமீற்றர்களில் நிலக்கண்ணி வெடிகள் முற்றாக அகற்றப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இன்னும் 96 சதுர கிலோமீற்றர் பரப்பே கண்ணி வெடி அகற்றலுக்கு எஞ்சி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது