கண்ணிவெடி அகற்றுவதற்கு பிரித்தானியா நிதியுதவி

david-cameronஇலங்கையின் வடக்கில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் திட்டத்திற்காக பிரித்தானியா மீண்டும் நிதி உதவியை அறிவித்திருக்கிறது.

இதன்படி இரண்டு வருட காலத்திற்கு 21 இலட்சம் ஸ்ரேலிங் பவுண்ஸ்களை பிரித்தானிய அரசாங்கம் கண்ணிவெடி அகற்றும் திட்டத்திற்காக ஒதுக்கியுள்ளதாக பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.

இந்த நிதி, மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கான வாழ்வாதாரம், பாடசாலை மற்றும் வீதி திருத்தல் பணிகளுக்காகவும் பயன்படுத்தப்படும் என பிரித்தானிய சர்வதேச அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய இடங்களில் புதைக்கப்பட்டுள்ள தரைக் கண்ணிவெடிகளை அகற்ற பிரித்தானியா ஏற்கனவே, 30 இலட்சம் ஸ்ரேலிங் பவுண்ஸ்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.