கணவன் – மனைவி வெட்டிக்கொலை நீர்வேலியில் பயங்கரம்!காணியே காரணம்! சகோதரன் கைவரிசை!

நீர்வேலிப்பகுதியில் நேற்று இரவு 8.15 மணியளவில் கணவன் – மனைவி இருவரும் வெட்டிகொலை செய்யப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த மகன் வெட்டுக் காயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காணி பிரச்சனை காரணமாக சகோதரனே தனது சகோதரியையும் மைத்துனரையும் வீதியில் வழிமறித்து வெறியாட்டம் ஆடி வெட்டிப்படுகொலை செய்திருப்பதாக முந்திக்கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

இச்சம்பவத்தில் அதேஇடத்தினைசேர்ந்த மார்க்கண்டு உதயகுமார்(50)  வசந்தமலர் உதயகுமார்(45) ஆகிய 4 பிள்ளைகளின்பெற்றோர் கொல்லப்பட்டுள்ளனர்.தப்பி ஓடிய கொலையாளியை பொலிசார் தேடிவருகின்றனர்.மண்ணுக்காக மாற்று இனத்துடன் மல்லுக்கு நின்ற காலம் போய் தற்போது வீட்டுக்குள்ளேயே வெட்டுக்கொத்துக்களில் நமது மண்பற்றாளர்கள் இறங்கிவிட்டதை மேற்படி சம்பவம் உறுதிப்படுத்துகிறது.

 

Related Posts