கடன் தொல்லையால் குடும்பஸ்தர் சுருக்கிட்டு தற்கொலை

girl-hanging-rope-suicideஅதிகரித்த கடன் தொல்லை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

அல்வாய் மனோகரா பகுதியைச் சேந்த குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அதே பகுதியைச் சேர்ந்த அரசினர் வைத்தியசாலை சிற்றூழியரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இவர் அதிகரித்த கடன் தொல்லை காரணமாகவே உயிரிழந்ததாக உறவினர்களால் தெரிவிக்கப்படுவதுடன் நெல்லியடிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுப் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.