கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்த வயோதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ். நகரப்பகுதயில் 725 கிராம் கஞ்சாவுடன் ஆட்டோ ஒன்றில் பயணம் செய்த வேளையில், யாழ். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பண்டத்தரிப்பு பனிப்புலம் பகுதியைச் சேர்ந்த வயோதிபர் ஒருவரே கைது செய்யப்பட்டு, யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
- Sunday
- September 15th, 2024