ஒரே பாடசாலையில் 71 மாணவர்களுக்கு பார்வை குறைபாடு!! அதிக தொலைபேசி பாவனை காரணமா??

கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தருமபுரம் இலக்கம் 1 அ.த.க பாடசாலையில் தரம் ஒன்று தொடக்கம் ஐந்து வரையான மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

இந்நிலையில் இவர்களுக்கான கண் பரிசோதனை கடந்த 16 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.

சுமார் 370 மாணவர்கள் கல்வி கற்றுவரும் நிலையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நாளன்று 320 மாணவர்கள் பாடசாலைக்கு சமுகமளித்துள்ளனர்.

இவர்களுக்கான கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 71 மாணவர்களுக்கு பார்வைக்குறைபாடு ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கு அதிக தொலைபேசி பாவனை காரணமாக அமைந்திருக்கலாம் என வைத்தியர்கள் தெரிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து 71 மாணவர்களும் மேலதிக கண்பரிசோதனைக்காக அழைக்கப்பட்டு அவர்களுக்கு கண்ணாடி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor