ஒட்டகப்புலம் காணி தனியாருடையது; – யாழ். அரச அதிபர்

ஒட்டகப்புலம் பிரதேசத்தில் பாதுகாப்பு அமைச்சு கையகப்படுத்தியுள்ள காணி தனியாருக்குச் சொந்தமானது என்பதைத் தெளிவுபடுத்திப் பாதுகாப்பு அமைச்சுக்கு பதில் அனுப்பப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

ஒட்டகப்புலம் பிரதேசத்தைப் பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்குமாறு கோரி காணி அமைச்சினால் கடிதம் ஒன்று தெல்லிப்பழைப் பிரதேச செயலகத்துக்கு அனுப்பப்பட்டிருந்தது. குறித்த பிரதேசம் தனியாருக்குச் சொந்தமானது.

அத்துடன் குறித்த பிரதேசத்தில் மீள்குடியமர்வதற்காக 239 குடும்பங்கள் இதுவரை தெல்லிப்பழைப் பிரதேச செயலகத்தில் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். அத்துடன் குறித்த பகுதியைச் சேர்ந்த இதுவரை பதிவுகளை மேற்கொள்ளாதவர்கள் உடனடியாகத் தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் இது தொடர்பில் தெல்லிப்பழை பிரதேச செயலரிடம், குறித்த பகுதி தொடர்பான விபரங்களை கோரியுள்ளேன். அந்த அறிக்கை கிடைத்ததும் உடனடியாக பாதுகாப்பு அமைச்சின் செயலருக்கு அனுப்பப்படு