எந்திரனை ஓரங்கட்டிய ஐ!

தமிழ் சினிமாவில் தன் சாதனைகளை தானே முறியடிப்பவர்கள் ஒரு சிலரே, அந்த வகையில் ரஜினியும், ஷங்கரும் தான் இதில் கில்லாடிகள்.

ai_enthiran001

இவர்கள் கூட்டணியில் உருவான எந்திரன் படமே இன்று வரை வசூலில் நம்பர் 1 ஆக இருந்து வருகிறது. இதை தொடர்ந்து தன் சாதனையை தானே முறியடிக்க ஷங்கர் தன் அடுத்த படைப்பான ஐ’யை உருவாக்கிவிட்டார்.

இப்படத்தின் தெலுங்கு உரிமை 30 கோடி ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம். இது ‘எந்திரன்’ படத்தின் டப்பிங் உரிமை விலையை விட 3 கோடி ரூபாய் அதிகமாம். ‘எந்திரன்’ டப்பிங் உரிமை 27 கோடி ரூபாய்க்கு விலை போயுள்ளது குறிப்பிடத்தக்கது.