உலக ராணிக்காக போட்டியிடும் ஈழப் பெண்

ஈழத்தை சேர்ந்த தமிழ் பெண் முதல் முறையாக உலக இளவரசி பட்டம் என்ற பட்டதை சுவீகரிக்க உள்ளார்.

abishekka

உலக நாடுகளில் நடைபெற்று வரும் உலக அழகி போட்டிக்கு அடுத்த படியாக வருடந்தோறும் நடத்தப்படும் உலக இளவரசி போட்டி. இம்முறை 40 நாடுகளை சேர்ந்த அழகிகள் போட்டியிடுகின்றனர்.

இந்த போட்டியில் கனடாவில் வசிக்கும் ஈழத்தை பூர்வீகமாக கொண்ட ‘அபிஷேகா ல்லயோட்சன்’ என்ற பெண்ணும் அடங்குவார். முதல் முறையாக ஒரு தமிழ் பெண் உலக அளவிலான படத்தை வெல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

போட்டியில் எல்லா சுற்றுகளும் முடிந்து விட்ட நிலையில், இறுதி சுற்றாக மக்களிடம் யாரை தேர்ந்தெடுப்பது என இணையம் மூலம் வாக்கு நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் தனக்கு வாக்களிக்க வேண்டும் என உலக தமிழர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அபிஷேகா ல்லயோட்சன் ஏற்கனவே இளம் வயதினருக்கான மிஸ் கனடா பட்டதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.