உயர்தரப் பரீட்சை முடிவுகள் இன்று 25.12.2011 வெளியாகும்

க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் இன்று வெளிவரவுள்ளன என பரீட்சைத் திணைக்கள ஆணையாளர் அனுர எதிரிசிங்க அறிவித்துள்ளார்.கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற பரீட்சை முடிவுகள் இன்று வெளியிடப்படுவதுடன் நாளை நண்பகல் முதல் கொழும்பு மாவட்ட பாடசாலைகளின் அதிபர்கள் பரீட்சை முடிவுகளை பரீட்சைத் திணைக்களத்தில் சென்று நேரடியாகப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை எனைய வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பாடசாலைகளுக்கான பரீட்சை முடிவுகளும் நாளை தபாலில் பரீட்சைத் திணைக்களத்தினால் சேர்க்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சை முடிவுகளை பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்திலும் (http://www.doenets.lk) பார்வையிட முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை க.பொ.த உயர்தரப் பரீட்சை புதிய பாடத்திட்டம் பழைய பாடத்திட்டம் என இரு பிரிவுகளாக நடைபெற்றதுடன் யாழ் மாவட்டத்தில் இந்த முறை முதல் தடவையாக பல பாடசாலைகளின் மாணவர்கள் ஆங்கில மொழி மூலம் பட்சைக்குத் தோற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

http://www.doenets.lk

Recommended For You

About the Author: webadmin