உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு திடீர் இடமாற்றம்

meeting_jaffna_police_jeffreeyயாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.ஜெவ்ரி திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இவருக்குப் பதிலாக மாத்தறை பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய விமலசேன, யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக பதவியேற்கவுள்ளதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.