ஈழ அகதிகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!

இந்தோனேசியாவில் உள்ள ஈழத் தமிழ் அகதிகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறினார்.

veeramani

கும்பகோணத்தில் வைத்து நிருபர்களுக்கு பேட்டியளித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது,

அவுஸ்திரேலியா செல்லும் வழியில் இந்தோனேசியாவுக்குள் ஈழத் தமிழர்களை அனுமதிக்காதது வேதனைக்குரியது. மனித நேயம் இல்லாமல் இந்தோனேசியா அரசு நடந்துள்ளது.

இப்பிரச்சினையில் ஐ.நா. சபை தலையிட்டு தீர்வு காண வேண்டும். மேலும் இந்தோனேசியாவில் உள்ள இலங்கையின் தமிழ் அகதிகளை மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலைக்கு கடந்த சட்ட பேரவையில் இயற்றப்பட்ட சிறப்பு தீர்மானத்தை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும், என அவர் கூறினார்.

Related Posts