இளைய தளபதியுடன் இணையும் இளைய திலகம்!

‘ஜில்லா’ படத்திற்குப் பிறகு விஜய் நடித்து வரும் படம் ‘கத்தி’. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைத்திருக்கிறார். தற்போது இப்படம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

prabu-vijay

இப்படத்திற்குப் பிறகு விஜய் சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் சுருதிஹாசன், ஹன்சிகா நடிக்கிறார்கள். மேலும் நீண்ட நாட்களுக்குப்பிறகு தமிழ் படத்தில் ஸ்ரீதேவி நடிக்கவிருக்கிறார். இவர்கள் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இவர்களுடன் இளைய திலகம் பிரபு இணைய இருக்கிறார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரபுவிடம் அணுகி கேட்டதற்கு பிரபு நடிக்க சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

இப்படத்திற்கு ஸ்ரீதேவி பிரசாத் இசையமைக்கிறார். நட்டி நட்ராஜ் ஒளிப்பதிவை கவனிக்கிறார். ‘கத்தி’ பட வேலைகள் முடிந்தபின் விஜய் இப்படத்தின் வேலைகளை தொடங்க உள்ளார். இப்படம் விஜய்க்கு 58வது படமாகும்.

Recommended For You

About the Author: Editor