அச்சுவேலி பகுதியில் அழகு நிலையத்தை நடத்தி வந்த இளம்பெண் மீது வெள்ளிக்கிழமை (03) இனந்தெரியாத நபர் ஒருவர், தாக்குதல் மேற்கொண்டதில் பாதிக்கப்பட்ட பெண் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
அதேயிடத்தைச் சேர்ந்த கஜேந்திரன் சிந்துஜா என்ற 21 வயதுடைய பெண் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அழகு நிலையத்தில் தனித்திருந்த பெண் மீது, அத்துமீறி நுழைந்த இளைஞர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுவிட்டுச் தப்பிச் சென்றுள்ளார். தாக்குதலில் மயக்கமடைந்த பெண்ணை பிறிதொரு பெண் அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.