இலத்திரனியல் காட்சியறையில் இருந்து பணத்தைத் திருடிய நபர் பிடிபட்டார்

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள பிரபல இலத்திரனியல் காட்சியறையில் இருந்து பணத்தைத் திருடிய நபர் கையும் களவுமாக பிடிபட்டார்.இவர் தற்போது யாழ். காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.இது குறித்து தெரிய வருவதாவது, இன்று காலை குறித்த இலத்திரனியல் காட்சியறைக்கு வந்த நபர் இலத்திரனியல் பொருள் ஒன்றை கொள்வனவு செய்து விட்டு பணத்தினை செலுத்த போயுள்ளார்.

பணத்தைச் செலுத்தி விட்டு மேசை மீதிருந்த ஒரு இலட்சம் ரூபாவினையும் எடுத்துக் கொண்டு சென்றுள்ளார்.பணத்தைக் காணாது குறித்த நபர் மீது சந்தேகம் எழ அவரைத் துரத்திச் சென்று கையும் களவுமாகப் பிடித்து யாழ். காவற்துறையினரிடம் ஒப்படைத்தனர். காவற்துறையினர் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர் ஏறாவூரைச் சேர்ந்தவர் எனவும் தற்போது தட்டாதெரு சந்தியில் சாப்பாட்டுக் கடையொன்றில் பணி புரிபவர் எனவும் ஆரம்பக் கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.அத்துடன் இவரிடம் இருந்து குறித்த நபருடைய பெயருடன் ஒரு கடனட்டையும் வேறு பெயர்களுடன் நான்கு கடனட்டைகளும் அடங்கலாக ஐந்து வங்கிக் கடனட்டைகள், பத்திற்கும் மேற்பட்ட சிம் அட்டைகள் மற்றும் பெருந்தொகையான பணம் என்பன இவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

யாழ். காவற்துறையினர் குறித்த நபரை திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

Related Posts