நோர்வே பிரதமர் எர்னா சோல்பர்க் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
இன்று காலை கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் அவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாக, எமது விமான நிலையச் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டே அவர் இலங்கைக்கு வந்துள்ளதாக, வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.