இலங்கைக்கு உதவும் ஆர்வத்தில் நடிகர் கமல்ஹாசன்

தமிழக நடிகரும் இயக்குநருமான கமல்ஹாசன், தனது நலன்புரிச் சங்கத்தின் மூலம் இலங்கைக்கு உதவ விரும்பம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கான இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் டி.வெங்கடேஷ்வரனின் அழைப்பின் பேரில் கடந்த 24 ஆம் திகதியன்று கமல்ஹாசன், சென்னையிலுள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகரகத்துக்கு சென்றுள்ளார்.

இதன்போது இலங்கையின் இயற்கை அழகு மற்றும் சினிமா துறை குறித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக கமலஹாசனும் திரையுலகக் குழுவினரும் இலங்கைக்கு வருகை தரவேண்டும் என்று இலங்கையின் துணை உயர் ஸ்தானிகர் டி.வெங்கடேஷ்வரன் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.

இதன்போது தனது நலன்புரிச் சங்கத்தின் மூலம் இலங்கைக்கு உதவும் தமது விருப்பத்தை கமலஹாசன் வெளிப்படுத்தியுள்ளார்.