இலகு கடன் அடிப்படையில் தையல் இயந்திரம் வழங்கல்

event-swingநல்லூர் பிரதேச செயலர் பிரிவின் கிராம மாதர் அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் உற்பத்திதிறன் மேம்பாட்டு அமைச்சின் தொழில் வழிகாட்டல் பிரிவினால் நடத்தப்பட்ட பயிற்சி நெறிகளைப் பூர்த்திசெய்தவர்களுக்கு இலகு கடன் அடிப்படையில் தையல் இயந்திரங்கள் நேற்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

யாழ்ப்பாணம் வண்ணார்ப்பண்ணை லோட்டஸ் வீதியில் உள்ள பாரதியார் சனசமூக நிலையத்தில் வைத்து இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டன.

நல்லூர் பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்தர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நல்லூர் பிரதேச செயலர், சுன்னாகம் பிரதேச அபிவிருத்தி வங்கியின் முகாமையாளர், நல்லூர் பிரதேச செயலக திட்டப்பணிப்பாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு இந்த உதவிகளை வழங்கி வைத்தனர்.

இந்த பயிற்சி நிலையத்தில் பயிற்சியைப் பெற்ற 15 பேருக்கு பிரதேச வங்கியின் ஊடாக இலகு கடன் அடிப்படையில் இந்த தையல் இயந்திரங்கள் வழங்க்கப்பட்டுள்ளது.