இராணுவ ரக்வண்டி மோதி ஒருவர் யாழ் வைத்தியசாலையில்

இராணுவ ரக் வண்டியினால் மோதுண்டு படுகாயமுற்ற நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக் கிழமை இரவு 7.30 மணியளவில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இராணுவத்தினரினால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடுவில் மானிப்பாய் வீதியில் உள்ள மதவடி என்னும் இடத்தில் இடம் பெற்ற இராணுவ ரக் மற்றும் மோட்டார் சையிக்கிள் மோதுண்டதில் வவுனியா மகாறம்பைக்குளத்தைச் சேர்ந்த வைத்திலிங்கம் ஜெயராசா என்பவரே படுகாயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவராவார்.

உடனடியாக தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இருந்து அம்புலன்ஸ் வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறிப்பிட்ட விபத்து சம்பந்தமாக சுன்னாகம் பொலிசார் விசாரனைகளை மேற்க் கொண்டுள்ளார்கள்.