இராணுவ பயன்பாட்டிலிருந்த 112 இடங்கள் விடுவிப்பு

army-stay-mapயாழ் மாவட்டத்தில் யுத்தத்திற்குப் பின்னரான காலத்தில் இராணுவத்தின் பயன்பாட்டிலிருந்த இடங்களில் 112 இடங்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ் பாதுகாப்பு படைத்தலைமையம் அறிவித்துள்ளது.

யுத்தத்திற்கு முந்திய காலத்தில் 43 ஆயிரம் படையினர் யாழ் மாவட்டத்தில நிலைகொண்டிருந்தனர் இவர்கள் யாழ் மாவட்டத்தில் 188 இடங்களில் இருந்தனர்.

இதில் 112 இடங்களில் இருந்து இராணுவத்தினர் வெளியேறியுள்ளதாகவும் இன்னும் 76 இடங்களில் மட்டுமே இராணுவத்தினர் உள்ளனர் என்று பாதுகாப்பு படைத்தலையகம் அறிவித்துள்ளது.

பாதுகாப்பு படைத்தலையகம் அமைச்சர் டக்ளஸ் தேவாந்தாவிடம் சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.