இன்று காலநிலை எப்படி இருக்கும்?

மேல், வட மேல், தென், மத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களில் மழை பெய்யலாம் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, புத்தளம் தொடக்கம் மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடான திருகோணமலை வரை மட்டக்களப்பு தொடக்கம் பொத்துவில் ஊடான ஹம்பாந்தோட்டை வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70-80 வரை அதிகரிக்கலாம் எனவும் வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Related Posts