Ad Widget

இந்திய மீனவர்கள் யாழில் உண்ணாவிரதம்

இந்திய மீனவர்கள் 51 பேர் அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி யாழ்.சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தினை முன்னெடுத்து வருகின்றார்கள்.

குறித்த மீனவர்கள் இன்று வியாழக்கிழமை காலை முதல் தமது உண்ணாவிரதத்தினை ஆரம்பித்துள்ளார்கள்.

கடந்த தினங்களில் பருத்தித்துறை மற்றும் நெடுந்தீவு கடற்ப்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட குறித்த 51 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், பண்டிகைக் காலங்கள் வருகின்ற காரணத்தினால் தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தினை இவர்கள் முன்னெடுத்து வருகின்றார்கள்.

இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் நடராஜா மற்றும் இந்திய துணைத்தூதுவர் அலுவலக அதிகாரிகள் இலங்கை அரசாங்கத்துதடன் கலந்துரையாடுவதாகவும், உண்ணாவிரதத்தினை நிறுத்துமாறும் இந்திய மீனவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இருந்தபோதிலும் உண்ணாவிரதத்தினை நிறுத்துவதற்கான தீர்மானத்தினை இந்திய மீனவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Posts