இந்திய அமைதிப்படை இலங்கையில் பாலியல் வல்லுறவில் ஈடுபடவில்லையாம்!

இந்திய அமைதிப்படையினர் இலங்கையில் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டடை மறுத்துள்ள இந்தியா, இது தொடர்பாக இலங்கை அரசாகங்கத்திடமிருந்து முறைப்பாடுகள் எதுவும் தமக்குக் கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சகப் பேச்சாளர் தெரிவித்துள்ளவை வருமாறு:-

இலங்கை அரசாங்கம் இது குறித்து எங்களிடம் கேள்விகள் எதனையும் எழுப்பவில்லை. அப்படியான கேள்வி வந்தாலும் எங்களால் இலங்கை அரசாங்கத்துக்கு மாத்திரமே பதிலளிக்க முடியும். என்று கூறியுள்ளார்.

இலங்கையில் இந்திய அமைதிப்படையினர் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டனர் என்று பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.