இந்தியாவிற்கு நீந்திச்சென்ற இலங்கையர் தமிழகத்தில் கைது

arrestஇலங்கையார் ஒருவர் கடல் வழியாக இந்தியாவுக்கு நீந்தி சென்ற போது இந்திய கடலோரப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு கடலில் நீந்தி செல்வதற்குரிய எந்தவொரு அனுமதி பத்திரமுமின்றி வந்த இலங்கையை சேர்ந்த வசீகரன் என்பவரையே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களாக இவர் கடலில் இருந்துள்ளார் எனவும் அவரை மீனவர்கள் படகில் ஏற்றியதுடன் கடலோரக் காவல் படைக்கு தகவல் கொடுத்தனர்.

இந்த நிலையில் அவரிடம் விசாரணை நடத்திய கடலோரக் காவல் படை அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.