அரசியல்வாதியின் பிள்ளைக்கு புத்திமதி கூறிய ஆசிரியையை அரசியல் வாதியிடம் மன்னிப்பு கேட்க அனுப்பிய அதிபர்!

impartial-advice-big-googdகுருணாகல் நகர சபை தலைவரின் பிள்ளைக்கு புத்திமதி கூறிய ஆசிரியை ஒருவரை, மன்னிப்பு கேட்பதற்காக நகரசபை தலைவரின் வீட்டிற்கு அனுப்பியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், குருணாகல் மலியதேவ மகா வித்தியாலயத்தின் அதிபரிடம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, கல்விச் செயலாளர் அனுர திஸாநாயக்க தெரிவித்தார்.

தேசிய பாடசாலை பிரிவின் விசாரணை குழுவினர், நேற்று செவ்வாய்கிழமை (08) குருணாகல் பிரதேசத்திற்கு சென்றுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

அரசியல்வாதி ஒருவரின் வீட்டிற்கு ஆசிரியயை அனுப்பிய சம்பம் தொடர்பில், விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கல்வி அமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor